முதல் 'காதலன்' மீது 'காதலி' புகார்... 'விஷயம்' தெரிந்த 2வது காதலன் எடுத்த 'முடிவு'... காதலியின் 'பரிதாப' நிலை...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்த இளம்பெண்ணை இருவரும் விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மிடாலத்தை சேர்ந்த ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் வாடகைக்கு குடியிருக்கும் பட்டதாரி பெண்ணான அஞ்சலி என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அஞ்சலி, ராஜேஷிடம் சரியாக பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜேஷ் செல்போனில் அழைத்தாலும் அதற்கு பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார்.
இதனால் இடிந்து போன ராஜேஷ், அஞ்சலி குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளார். விசாரணையில் ராஜேஷுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அஞ்சலி, ராஜேஷை கழட்டி விட்டுவிட்டு குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராகவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞரை காதலிப்பது தெரியவந்துள்ளது.
இதையறிந்த ராஜேஷ் நேற்று முன்தினம் அஞ்சலி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ராகவனும், அஞ்சலியும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ், தான் செலவு செய்த பணத்தை அஞ்சலியிடம் திரும்ப கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அஞ்சலியின் இரண்டாவது காதலன் ராகவன், ராஜேஷை தட்டிக் கேட்கவே இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு அஞ்சலியின் வீட்டிலேயே இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளனர்.
இதுகுறித்து அஞ்சலி குளச்சல் காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் அஞ்சலி இருவரையும் காதலித்தது தெரியவந்தது. இதையடுத்து இப்பிரச்சினையை நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் அஞ்சலிக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருப்பது தெரியவந்த ராகவன், இனி தனக்கும் அஞ்சலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக் கொடுத்துட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
