‘கூட தூங்கின குழந்தைய காணோம்’... முன்னுக்குப் பின் ‘முரணாக’ பதிலளித்த ‘தாய்’ கொடுத்த ‘உறையவைக்கும்’ வாக்குமூலம்... மாநிலத்தையே ‘உலுக்கிய’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 19, 2020 12:33 AM

கண்ணூரில் ஒரு வயது மகனைக் கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.

Kannur Kerala Mother Who Killed Baby To Live With Lover Arrested

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரணவ் - சரண்யா. இவர்களுக்கு வியான் என்ற ஒரு வயது மகன் உள்ளார். இந்நிலையில் இரவு தங்களுடன் தூங்கிய குழந்தை வியானை காலை எழுந்து பார்த்தபோது காணவில்லை என கணவன் - மனைவி இருவரும் நேற்று காலை போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், காலை 10 மணியளவில் பிரணவின் வீட்டருகே உள்ள தாயில் கடற்கரையில் குழந்தை வியானின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. வீட்டருகே உள்ள கடற்கரையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், போலீசாருக்கு பிரணவ் - சரண்யா தம்பதி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சந்தேகத்தில் போலீசார் அவர்கள் இருவரிடமும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டபோது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாகவே பேசியுள்ளனர். போலீஸ் விசாரணையில், இரவு 2.30 மணியளவில் குழந்தை வியான் அழுததால் தனது கணவனிடம் குழந்தையை சமாதானப்படுத்தச் சொல்லிவிட்டு தூங்கியதாக சரண்யா கூறியிருக்கிறார். ஆனால் அதை மறுத்த பிரணவ், குழந்தை அழுதபோது சரண்யாவே சமாதானப்படுத்தியதாகவும் தான் தூங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர்களில் ஒருவர் இரவு கடல்பகுதிக்குச் சென்றிருந்தால் நிச்சயம் அவர்களுடைய உடையில் உப்பு படிந்திருக்கும் என்பதால், இருவருடைய உடைகளையும் கைப்பற்றிய போலீசார் அவற்றை ஆய்வுக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் பிரணவின் வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சரண்யா கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு போலீசார் உறைந்து போயுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள போலீசார், “இரவு அழுத குழந்தையை சமாதானப்படுத்த, சரண்யா கடற்கரைக்கு குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தை அழுகையை நிறுத்தியதும், கடலை ஒட்டிய பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கற்குவியலின் மேல் குழந்தையை அவர் வீசியெறிந்துள்ளார். அப்போதும் சிறிதுநேரத்திற்கு பிறகு குழந்தையின் அழுகை சத்தம் கேட்க, கீழே இறங்கிச் சென்ற அவர் குழந்தையை மேலே தூக்கி வந்து மீண்டும் கற்குவியலின் மேல் வீசியுள்ளார். பின்னர் குழந்தையை அலைகள் இழுத்துச் செல்வதைப் பார்த்து குழந்தை இறந்துவிட்டது என உறுதிசெய்த பிறகே அவர் வீடு திரும்பியுள்ளார்.

கணவன் - மனைவி இடையே கடந்த சில மாதங்களாக பிரச்னை இருந்து வந்த நிலையில், விவாகரத்து வாங்க சரண்யா தரப்பில் முடிவுசெய்யப்பட்டு அவருக்கு வேறொருவருடன் திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் சரண்யா குழந்தையைக் கொலை செய்துவிட்டு தன் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார். குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவரைக் கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : #KERALA #CRIME #MURDER #KANNUR #MOTHER #BABY #LOVE