'பொண்ணு நல்லா இல்ல'... 'காதலர் செய்த காரியத்தால்'... 'பரிதவித்த இளம் பெண்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 18, 2020 04:18 PM

சென்னையில் காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற நிலையில், காதலனை பிடித்து போலீசார்  திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Man Married his Girlfriend after intervene

சென்னை அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் பொழிச்சலூர் 7-வது குறுக்கு தெரு அகத்தீஸ்வரர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 4 வருடமாக காதலித்து வந்துள்ளார். காதலர்களுக்குள் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படவே வெங்கடேஷ் கவிதாவை வேண்டாமென்று கூறியுள்ளார். இதனால் கவிதா 3 முறை தற்கொலைக்கு முன்றுள்ளார். மேலும் கோபமடைந்த கவிதா, தன்னை காதலித்தது மட்டுமில்லாமல், மனைவியிடம் நடப்பதுபோல் நடந்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக காதல் வெங்கடேஷ் மீது, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வெங்கடேஷை அழைத்து வரச் சென்றபோது, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். பின்னர் அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேஷ் நான்கு வருடமாக கவிதாவை காதலித்து வந்ததை ஒப்புக்கொண்டார். கவிதா அழகாக இல்லாததால் அவரை விட்டு பிரிந்ததாக வெங்கடேஷ் விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காதலர் வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்ததாலும், மூன்று முறை கவிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாலும், வெங்கடேஷை விட்டால் பிடிக்க முடியாது என்று போலீசார் எண்ணினர்.

பின்னர் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று இரு வீட்டார் சம்மதத்துடன் போலீசார் முடிவெடுத்து காவல் நிலையத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். காவல் நிலையத்தில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் நிகழ்ந்தது. பின்னர் இருவரிடமும் புகாரை திரும்பப் பெறுமாறு எழுதி வாங்கிக்கொண்டு போலீசார்  தம்பதிகளை வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MARRIAGE #CHENNAI #LOVERS