‘ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்’.. ‘வரப்போகும் புதிய சட்டம்’.. எங்க தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 24, 2020 01:45 PM

அமெரிக்காவில் உள்ள மாநிலம் ஒன்றில் ஆண், பெண் இருவரும் ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானலும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Utah senate unanimously moves to decriminalize polygamy

அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஒரு ஆண் பல பெண்களையும், ஒரு பெண் பல ஆண்களையும் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள யூட்டா மாநிலத்தில் புதிய சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். அதேபோல் ஆணும் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களையும் திருமணம் செய்துகொள்ளலாம்.

ஆனால் இதில் ஒரு நிபந்தனை என்னவென்றால், திருமண உறவுகளில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களது சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது. ஒரு பெண்ணோ, ஆணோ தங்களது துணைக்கு தெரியாமல திருமணம் செய்தால் அது குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்கு 750 டாலர் அபராதமாக விதிக்கப்பட உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பலரை திருமணம் செய்துகொண்டால் 5 ஆண்டுகள் தண்டனை அணுபவிக்க வேண்டும். இதனை மாற்றி புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு யூட்டா மாநில சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இது சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #AMERICA #MARRIAGE