கல்யாணம் ஆன 12 மணிநேரத்தில் பிரிந்த ‘காதல் ஜோடி’!.. ‘அந்தர்பல்டி அடித்த காதலி’.. ஷாக் ஆன காதலன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்யாணம் ஆன 12 மணி நேரத்தில் காதல் ஜோடி பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌடகா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பு தோழனான சந்தீப்பை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் சந்தீப்பின் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். புகாரில் பேரில் சந்தீப்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் புகாரை அப்பெண் வாபஸ் பெற்றுள்ளார். இதனால் கோபமான பெண்ணின் பெற்றோர் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். இதனை அடுத்து நேராக சந்தீப்பின் வீட்டுக்கு சென்று தனது குடும்பத்தினரை செய்ததை மன்னித்து தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதனால் சந்தீப்பின் குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அடுத்த 12 மணிநேரத்தில் மனதை மாற்றிக்கொண்ட அப்பெண் திருமணத்தை முறித்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். காதலியின் நிலையற்ற மனதால் வெறுப்படைந்த சந்தீப் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப், ‘அவளுடைய முட்டாள்தனமான முடிவால் நான் சோர்ந்து போய்விட்டேன். நான் அவளை உண்மையாக நேசித்தேன். ஆனால் அவள் என்ன விரும்புகிறாள் என அவளுக்கே தெரியவில்லை. இந்த விஷம் இதோடு முடிந்துவிட்டது. இனி நான் நிம்மதியாக இருப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
