'தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலி...' 'காதலியின் முகத்தை கடைசியாக பார்க்க வந்த இடத்தில்...' நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 25, 2020 12:17 PM

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் காதலியின் இறப்பு செய்தி கேட்டு ஊருக்கு வந்த காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder of a lover who heard the news of the girl\'s death

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள பெரியகோட்டக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ராகவன்.  இவர் ஐதராபாத்தில் சாப்டவேர் இஞ்சினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அருணா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களின் காதலை அருணாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் காதலர்கள் தொடர்புக்கொண்டு தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவர மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் அருணாவிற்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த  அருணா இரு நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த ராகவன் பதறிப்போய் காதலியின் உடலை கடைசியாக பார்க்க வந்தார். ராகவனுடன் பணியாற்றும் அதேபகுதியை சார்ந்த சஞ்சய் என்பவர் மூலம் கடத்த திட்டமிட்ட அவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு ராகவனை கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே வரவழைத்துள்ளனர். அங்கிருந்து பெண்ணின் தாய்மாமன் குட்ட ரமேஷ் உட்பட 6 பேர் இருசக்கர வாகனம் மூலம் ராகவனை கடத்தியுள்ளனர்.

பின்னர் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத அங்கிருந்த அய்யனார்கோயில் பின்புறம் வைத்து ராகவனை கொலை செய்துள்ளனர். பின்னரும் வெறி அடங்காத கொலையாளிகள் ராகவன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எரிந்துப்போன உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அருணாவின் அண்ணன் அருண்குமார், தினேஷ், ரஞ்சித்குமார், பிரகாஷ், சந்தோஷ், பாலாஜி மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சஞ்சய் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலை மறைவாகி இருக்கும் முக்கிய குற்றவாளியான குட்ட ரமேஷை தேடி வருகின்றனர்.

Tags : #LOVE