‘கல்யாணமான பெண்ணுக்கு’... ‘பேருந்து நடத்துநரால் நடந்த சோகம்’... அதிரவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 21, 2020 02:44 PM

கடலூர் அருகே திருமணமான பெண் ஒருவர் மீது ஏற்பட்ட காதலால், இளைஞர் ஒருவர்  அந்தப் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Due to Affair Woman who Ablaze by Private Bus Conductor

நெய்வேலியைச் சேர்ந்தவர் ஜான்விக்டர் என்பரின் மனைவி சலோமி (21). இவர் வடலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். தினந்தோரும், நெய்வேலியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில், வடலூரில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்று வந்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரியும் சுந்தரமூர்த்தி என்பருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினந்தோறும் அந்த குறிப்பிட்ட பேருந்தில் தான் சலோமி பயணிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சலோமி, சுந்தரமூர்த்தியிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுந்தரமூர்த்தி பல முறை சலோமியிடம் காரணம் கேட்டும், சலோமி தொடர்ந்து பேச மறுத்து வந்துள்ளார்.  இந்நிலையில், இன்று சலோமி மீது பேருந்தின் நடத்துனர் சுந்தரமூர்த்தி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்.

பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பேருந்து நடத்துனரின் செயலைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த சலோமி உயிருக்கு ஆபத்தான நிலையில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுந்தரமூர்த்தியை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #FIREACCIDENT #WOMAN #NEYVELI #LOVE