'கடமைக்காக கல்யாணத்தை தள்ளிப்போட்டாரு!'... 'அவருக்கு இப்படி நடந்தத ஏத்துக்கவே முடியல!'... உணர்ச்சி பொங்க 'மக்கள்' கண்ணீர்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது திருமணத்தை தள்ளிவைத்த மருத்துவர் வைரஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் பெங் யூன்ஹூவா என்பவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த மருத்துவர், கடந்த ஜனவரி மாதம் இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. அதைத் தொடர்ந்து, திருமண அழைப்பிதழ்கள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில், கொரோனாவின் கோர கரங்களிடம் சிக்கித் தவிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தனது திருமணத்தை ஒத்திவைத்திருந்தார். ஆனால், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த டாக்டர் பெங் யூன்ஹூவாவுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜின்யண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பெங் யூன்ஹூவா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் ஆயிரத்து 716 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.