‘28 பேருடன்’ புறப்பட்ட பேருந்து... திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தத்தால் ‘ஓடிவந்த’ ஊர்மக்கள்... ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில் நடந்து முடிந்த ‘கோரம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 26, 2020 04:07 PM

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Rajasthan 24 Dead As Bus Carrying Wedding Party Falls Into River

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் இருந்து சவாய்மதோபூருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 28 பேர் தனியார் பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்துள்ளனர். இன்று காலை 10 மணியளவில் பேருந்து பந்தி பகுதியில் உள்ள மேஜ் ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் போய்க்கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதையடுத்து தாறுமாறாக ஓடிய பேருந்து நொடிப்பொழுதில் பாலத்திலிருந்து ஆற்றிற்குள் கவிழ்ந்துள்ளது. இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் அலறித் துடிக்க, சத்தம் கேட்டு ஓடிவந்த ஊர்மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர்.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயமடைந்துள்ள 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததே விபத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

Tags : #ACCIDENT #RAJASTHAN #MARRIAGE #BUS #RIVER