‘அடுத்த வாரம் கல்யாணம்’... ‘பிரிந்து சென்ற காதலியை பழிவாங்க’... ‘வேறலெவலில் யோசித்த இளைஞர்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் காதலிக்கு திருமணம் நடக்கவிருப்பதை அறிந்து பழிவாங்கும் நோக்கத்துடன் இளைஞர் செய்த காரியம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியைச் சேர்ந்தவர் சரோஜ் குமார். 28 வயதான இவர், அருகில் உள்ள சலோன் பகுதியைக் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வழக்கறிஞர் ஒருவருடன் அடுத்த வாரம் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்தத் தகவலையறிந்து கோபம் கொண்ட சரோஜ் குமார் அப்பெண்ணை பழிவாங்கத் திட்டமிட்டார்.
அடுத்த வாரம் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்தப் பெண்ணும் தானும் ஒன்றாக சேர்ந்து இருப்பது போன்ற படங்களை மார்ஃபிங் செய்து, ஹோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல், ஹாப்பி ஹோலி போஸ்டர்களை உருவாக்கினார். அதன்பிறகு அந்தப் பெண் வசிக்கும் பகுதியில் அந்தப் போஸ்டர்களை சரோஜ் குமார் ஒட்டியுள்ளார். இதனைப் பார்த்த பெண் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்ததுடன் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை உடனடியாக காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சரோஜ் குமார் மேல் வழக்கு பதிவு செய்து, பிரதாப்கர் என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் மறைந்திருந்த அவரை 'ஆன்ட்டி ரோமியோ' பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சரோஜ் குமார் ஒட்டிய போஸ்டர்கள் நீக்கப்பட்டு, அவரிடம் முறையான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறி உள்ளனர்.