'அழைக்கா விருந்தாளியா கொரோனா வந்துடுமோனு ஒரு பயம் தான்!'... '220 ஜோடிகள்... ஒரே இடம்!'... 'கொரோனா' பரிதாபங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 22, 2020 11:40 AM

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில், 220 ஜோடி மணமக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பயந்து முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

220 couples marry at the same time in philippines ahead of corona

கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மட்டும் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதன் தாக்கம் வர்த்தகம், பொருளாதாரம், பங்குச்சந்தை போன்றவற்றிலும் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் 20.02.20 என்ற நாளைத் தேர்வு செய்து அன்றைய தினம் திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கொரோனா தாக்குதலுக்கு பயந்து அனைத்து திருமண ஜோடிகளும் முகமூடி அணிந்திருந்தது வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.

 

Tags : #CORONAVIRUS #MARRIAGE