'நான் அவர லவ் பண்றேன், ப்ளீஸ் நீங்க அவர்கிட்ட பேசாதீங்க...' '4 வாட்டி அபார்ஷன் பண்ணிருக்கேன், இப்போ ஏழு மாசம்...' காதலிகளை ஏமாற்ற நினைத்த காதலன் கைது...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 24, 2020 03:37 PM

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண் காவலரை கர்ப்பமாக்கிவிட்டு, முன்னாள் காதலியைத் திருமணம் செய்த காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Plaintiff married to another woman after getting pregnant

விழுப்புரம் அருகே உள்ள காணை கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ராஜலட்சுமி. இவர் கடந்த 2011ஆம் ஆண்டு காணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். அப்போது அவருக்கும், அவருடன் அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த கருங்காலிப்பட்டையைச் சேர்ந்த சரத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அதன் பிறகு, காவலர் பணிக்குச் சேர்ந்த சரத்குமார், தற்போது விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகும், ராஜலட்சுமி உடனான காதலை தொடர்ந்து வந்துள்ளார். அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் அடிக்கடி தனிமையிலும் இருந்து வந்துள்ளார்.

கடந்த சில வாரத்திற்கு முன்பு சரத்குமாரை திருமணம் செய்ய ராஜலட்சுமி கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால், திருமணம் செய்ய சரத்குமார் மறுத்துள்ளார். மேலும், சரத்குமாருடன் தற்போது விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் 27 வயதான பிரியங்கா என்ற பெண், ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். தான் சரத்குமாரை காதலிப்பதாகவும், இனிமேல் அவருடன் பேசக்கூடாதுஎன்று சொல்லி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின்பேரில் சரத்குமார், பிரியங்கா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு ராஜலட்சுமியை அழைத்துச்சென்று சரத்குமார் திருமணம் செய்து கொண்டார்.

இதைக் கேள்விப்பட்டதும் பிரியங்கா அதிர்ச்சியடைந்தார். உடனே இது பற்றி அவர் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், தான் கடந்த 2018-ம் ஆண்டு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றியபோது, அதே ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த சரத்குமார் உடன் காதல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்து சரத்குமார் பலமுறை தன்னோடு தனிமையில் இருந்ததாக கூறியுள்ளார். இதனால், தான் 4 முறை கர்ப்பமடைந்து, பின் வெளியே தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்புச் செய்ததாக பிரியங்கா கூறியுள்ளார். மேலும், தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் சரத்குமார், தன்னை ஏமாற்றி விட்டு ராஜலட்சுமியை திருமணம் செய்துகொண்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பிரியங்கா புகாரின் பேரில் சரத்குமார் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரியங்காவை கர்ப்பமாக்கி சரக்குமார் ஏமாற்றியதுடன் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து சரத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னாள் காதலியையும், தற்போதைய காதலியையும் காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு தப்பிக்க நினைத்த காவலர், முதல் காதலியை திருமணம் செய்து, இரண்டாவது காதலியை ஏமாற்றியதால் வசமாக சிக்கி சிறை சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #LOVE