‘திருமணத்திற்கு’ மறுத்த ‘தாய்க்கு’... பெண் கேட்டு வந்த ‘ராணுவ’ வீரரால் நடந்த பயங்கரம்.. ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 22, 2020 06:44 PM

ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த அவருடைய தாயை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Guntur Army Jawan Fires On Girls Mother Over Marriage Issue

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நடிமப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி. அதே ஊரைச் சேர்ந்த ராணுவ வீரரான பாலாஜி என்பவர் ரமாதேவியின் மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு ரமாதேவிக்கு பாலாஜி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ரமாதேவி அதற்கு மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பாலாஜி மீண்டும் பெண்கேட்டு ரமாதேவி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ரமாதேவியை நோக்கி சுட்டுள்ளார். பாலாஜி தன்னை தாக்கலாம் என எச்சரிக்கையாக இருந்த ரமாதேவி தப்ப முயன்றபோது தோட்டா முதலில் ரமாதேவியின் காதில் பட்டு பின் சுவற்றில் பட்டு தெறித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ரமாதேவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பாலாஜியை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் தப்பிச் செல்ல, உடனடியாக ரமாதேவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய பாலாஜியை தேடி வருகின்றனர்.

Tags : #CRIME #GUNTUR #ARMY #MARRIAGE #GIRL #MOTHER