‘காலேஜ் படிக்கும்போது மலர்ந்த காதல்’.. ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த இளம்பெண்.. மதுரை நீதிமன்றத்தில் தஞ்சம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 24, 2020 02:53 PM

ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த இளம்பெண் பாதுகாப்பு கேட்டு மதுரை நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Karur woman who married a transwoman in Erode temple

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா. இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ப்ரியா. இவர்கள் இருவரும் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை நாமக்கலில் உள்ள கல்லூரியில் ஒன்றாக பயின்றுள்ளனர். படிக்கும்போது நட்பாக பழகிய இவர்கள், பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர். இவர்களது காதலுக்கு இருவரின் பெற்றோரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ஈரோடு மாசாணி அம்மன் கோவில் வைத்து இருவரும் திருமணம் செய்துள்ளனர். பின்னர் பாதுகாப்பு கருதி இருவரும் மதுரை திருநங்கை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து அறக்கட்டளையின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு கேட்டு மதுரை நீதிமன்றத்தில் இருவரும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Tags : #MADURAI #MARRIAGE