'வீட்டுக்கு வந்த தோழியால் நடந்த விபரீதம்'... 'ஆத்திரத்தில் மனைவி கூறியதை'... 'அப்டியே செய்த கணவனால்'... 'பரிதவிக்கும் குழந்தைகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 27, 2020 06:11 PM

சென்னை மதுரவாயல், கன்னியப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் ஜெயவேல் (38). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரின் மனைவி திலகம் (37). இவர், நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு சஞ்சய்(12) என்ற மகனும், ஜனனி(11) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

Woman murdered by her Husband Due to Extra Marital Affair

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத் தகராறில் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக மதுரவாயல் போலீசாருக்கு ஜெயவேல் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், திலகத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, திலகத்தின் கழுத்திலும் முகத்திலும் ரத்தக் காயங்கள் இருந்ததால், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில்,  ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தத் தம்பதியினர் இன்னொரு இடத்தில் குடியிருந்துள்ளனர். அப்போது திலகத்தின் தோழி ஒருவர், இவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். அதனால் அந்தத் தோழிக்கும் ஜெயவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெயவேல் ஓட்டிவரும் லோடு ஆட்டோவின் கண்ணாடியில் திலகத்தின் பெயரோடு அந்தப் பெண்ணின் பெயரையும் எழுதி வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை  காலை முதல் திலகத்துக்கும் ஜெயவேலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திலகம், `என்னைக் கொன்றுவிட்டு அவளோடு சந்தோஷமாக வாழு' என்று ஆத்திரத்தில் கூறியுள்ளார். பின்னர், வீட்டைவிட்டு வெளியில் சென்ற ஜெயவேல், மது அருந்திவிட்டு வீடு திரும்பிய பிறகும், இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயவேல், மனைவி திலகத்தின் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது, திலகம், `என்னைக் கொலை செய்துவிடு' என்று சத்தம் போட்டுள்ளார். அதனால், தலையணையை எடுத்து திலகத்தின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார்.

இதில் மூச்சுத் திணறி திலகம் உயிரிழந்துள்ளார். கொலை செய்யும்போது, திலகம் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. திலகம் இறந்தப் பிறகும் அவரின் சேலையால் கழுத்தை நெரித்த ஜெயவேல், பின்னர்தான், திலகம் தற்கொலை செய்துகொண்டதுபோல நாடகமாடினேன்’ என்று ’ என்று ஜெயவேல் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திலகத்தின் தோழியிடமும் போலீசார் விசாரித்தபோது , அவர் ஜெயவேலுடன் இருந்த பழக்கத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தாய் உயிரிழந்துவிட, தந்தை ஜெயிலுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போத குழந்தைகள் இருவரும் அனாதையாகி உள்ளனர்.

Tags : #MURDER #CHENNAI #HUSBANDANDWIFE