குழந்தைக்கு ‘பெயர்’ வைப்பதில் ஏற்பட்ட தகராறு.. ‘பேரதிர்ச்சி’ கொடுத்த கணவர்... ‘உறைந்துநின்ற’ குடும்பத்தினர்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 24, 2020 08:37 AM

குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Man Commits Suicide After Fight With Wife Over Baby Name

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் வைரமுத்து (38). இவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி அமலாபுஷ்பம். இந்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அந்தக் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக வைரமுத்துவிற்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பணி முடிந்து வீடு திரும்பிய வைரமுத்து தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் திறக்காமலேயே இருக்க, அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அறைக்குள் வைரமுத்து தூக்கில் சடலமாகத் தொங்கிய நிலையில் இருக்க, அதைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் உறைந்து போயுள்ளனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #POLICE #CHENNAI #HUSBAND #WIFE #BABY #NAME