‘சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. போலீஸில் சிக்கிய அசாம் இளைஞர்.. பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகாசி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகாசி அருகே கொங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் பிரித்திகா (8). இவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு அருகே உள்ள புதருக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த நாள் முட்புதரில் சிறுமி ஆடைகள் கிழிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 பேரிடம் நடத்திய விசாரணையில் மஜம் அலி என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
