‘பட்டப்பகலில்’ இளைஞர் வெட்டிப்படுகொலை.. திருச்சி அருகே நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 23, 2020 05:49 PM

திருச்சி அருகே இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trichy youth murdered on road in Woraiyur police investigate

திருச்சி மாவட்டம் உறையூர் அருகே மின்னப்பன் தெருவை சேர்ந்த ஜிம் மணி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில், புகழேந்தி என்பவர்களுக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. கோயிலில் யாருக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஜிம் மணியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் செந்தில் மற்றும் புகழேந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 13ம் தேதி புகழேந்தி ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சின்ன செட்டி தெரு வழியாக இன்று சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. இதில் படுகாயமடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் புகழேந்தியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்த கொலை பழிக்குபழியாக நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #POLICE #TRICHY #YOUTH