‘திருப்பதிக்கு’... ‘சாமி கும்பிட சென்ற சென்னை இளைஞர்’... 'எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த மக்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 23, 2020 04:47 PM

சென்னையைச்  சேர்ந்த இளைஞர் ஒருவர் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்ற நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man Committed Suicide after Visits Tirupati Devasthanam

சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி காலையில் சப்தகிரி விரைவு ரயில் வழக்கம்போல் சென்றது. சித்தூர் மாவட்டம் நகரி ரயில் நிலையம் அருகே சப்தகிரி ரயில் வந்தபோது, ரயில் இன்ஜின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பதறிப்போன ரயில் இன்ஜின் ஓட்டுநர்  உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில் முன் விழுந்த வேகத்தில் தலையில் படுகாயம் அடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ந்து போயினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உடைமைகளை பரிசோதித்ததில், அவரது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ரயில்வே போலீசாரின் கையில் கிடைத்தது. அதில், தற்கொலை செய்துகொண்ட இளைஞர் சென்னை புறநகர் பகுதியான அனகாபுத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் சுரேஷ், கடந்த 21-ம் தேதி திருமலையில் சாமி தரிசனம் செய்ததும் தெரியவந்துள்ளது. சாமி கும்பிட வந்த இளைஞரின் தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #TRAINACCIDENT #ACCIDENT #YOUTH #CHENNAI #SUICIDE