மனைவியின் ‘பேஸ்புக்’ அக்கவுண்ட்டை பார்த்து மிரண்டுபோன கணவன்.. கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 23, 2020 03:38 PM

பேஸ்புக்கில் மூழ்கி இருந்த காதல் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband kills wife, because she spent too much time on social media

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அயாஜ் அகமது. இவரது மனைவி ரேஷ்மா. இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 3 மாதக்குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நாள் முழுக்க ரேஷ்மா செல்போனில் மூழ்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே யதேர்ச்சையாக தனது மனைவியின் செல்போனை எடுத்து அயாஜ் அகமது பார்த்துள்ளார். அப்போது ரேஷ்மாவுக்கு பேஸ்புக்கில் 6,000 ஃபாலோயர்களுக்கு மேல் இருந்ததும், அதில் சிலருடன் சேட்டிங் செய்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரேஷ்மா கோபித்துக்கொண்டு தனது அம்மாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து தனது கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், அதனால் விவாகரத்து வாங்க உள்ளதாகவும் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அயாஜ் அகமது, மனைவியிடம் சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் மனைவி கோபமாக இருப்பதால் வெளியே பல இடங்களுக்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்போது ரேஷ்மா அடிக்கடி செல்போனை எடுத்து சேட்டிங் செய்துகொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது கான் மனைவியை கழுத்தை நெரித்தும், கல்லால் முகத்தில் அடித்தும் கொலை செய்துவிட்டு சாலையோர புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து அந்தவழியாக சென்றவர்கள் சாலையோரம் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனை அடுத்து அவர் அடையாளம் காணப்பட்டு சில மணி நேரங்களில் கணவர் அயாஜ் அகமதை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #FACEBOOK #HUSBAND #WIFE