சென்னையில் ‘தனியே’ இருசக்கர வாகனத்தில் சென்ற ‘இளம்பெண்ணுக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சிசிடிவி’ உதவியுடன் போலீசார் ‘தீவிர’ விசாரணை...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 23, 2020 01:57 PM

வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Velachery Chennai Girl Died In Lorry Two Wheeler Accident

சென்னை வேளச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவர்மீது திடீரென அவ்வழியே சென்ற லாரி ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணிற்கு மார்பு, இடுப்பு, வயிறு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட அப்பகுதியினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், முதற்கட்டமாக அடையாளம் தெரியாத லாரி மோதியதில் உயிரிழந்துள்ள அந்தப் பெண் ஆலந்தூரைச் சேர்ந்த ஷெர்லி மடோனா (22) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விபத்து ஏற்படுத்திய லாரியை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

Tags : #ACCIDENT #CCTV #CHENNAI #VELACHERY #GIRL