'ரஜினி' சென்ற விமானத்தில் 'கோளாறு'... உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் விபத்து 'தவிர்ப்பு'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பயணிகளுடன் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து இன்று காலை மைசூருக்கு ஒரு சிறியரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயணிகள் என 48 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார் பைலட். அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
Tags : #RAJINIKANTH #CHENNAI #AIRPORT #TECHNICAL PROBLEM #LANDED CHENNAI
