'நண்பர்களுடன் சந்தோஷமாக'... சுற்றிப் பார்க்கச் சென்ற'... ‘பொறியியல் கல்லூரி மாணவர்கள்’... ‘கடைசியில் நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 27, 2020 03:59 PM

சென்னையில் நீலங்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நீரில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Three including 2 Engineering Students died after drowned

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பாலாஜி (20). கேளம்பாக்கம், படூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அதேப் பகுதியை சேர்ந்த இவரது நண்பர்  மகேஷ் (18), செம்மஞ்சேரியில் உள்ள தனியார்  பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும், நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை கடலில் குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் பாலாஜி, மகேஷ் இருவரும் சிக்கினர். சகநண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்றுவிட்டது. இதில் பாலாஜி, மகேஷ் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இவர்களது உடல்கள் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கிய 2 பெண்களை மீட்க சென்ற 3 இளைஞர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெங்களூரு விஜயநகரை சேர்ந்தவர் காவியா (18). இவர் வேலூரில் உள்ள வி.ஐ.டி.யில் எம்.எஸ். ஐ.டி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தோழி பூர்ணிமா (21). இவர்கள் இருவரும் நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ்  கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தனர். பின்னர் மாலை இருவரும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது சென்னை எண்ணூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த நாக்பூரை சேர்ந்த மாயர் பதஸ்கான் (20), ராஜஸ்தான், ஜோத்பூரை சேர்ந்த ஆனந்த் (23), நியூ டெல்லியை சேர்ந்த அங்கித் (19) ஆகிய மூன்று பேரும் நேற்று  எலியட்ஸ் கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தனர்.

கடலில் குளித்துக்கொண்டிருந்த காவியா, பூர்ணிமா ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதைப் பார்த்த இளைஞர்கள் 3 பேரும் அந்த இரண்டு பெண்களை காப்பாற்ற கடலில் இறங்கி உள்ளனர். அப்போது அவர்களும் கடல்  அலையில் சிக்கினர். 5 பேரும் கடல் அலையில் சிக்கி தவிப்பதை  பார்த்த  ஓடை குப்பம் கடற்கரை பாதுகாவலர்கள் சுதாகர், கலிசா, சந்தோஷ், கரண் ஆகியோர் கடலில் இறங்கி 5 பேரையும்   காப்பாற்றினர். 

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் 5 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த மாயர்  பதஸ்கான்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்த தகவலின் பேரில் சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயர் பதஸ்கான் சடலத்தை கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம்  தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags : #DIED #CHENNAI #BEACH