‘திருடுன பைக்கை பார்ட்பார்டா பிரிச்சு விற்பனை’.. ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 100-க்கும் மேல’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பெரம்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது. இதுதொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்துள்ளன. இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு புரசைவாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றை திருட முயன்ற தமிழ்வாணன், சாமுவேல், சண்முகம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், கடந்த ஒரு வருடமாக 100-க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி, அவற்றின் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட இருசக்க வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
