‘பொங்கலன்று’ காணாமல்போன ‘இளைஞர்’... ‘உடலை’ பார்த்து ‘மயங்கி’ விழுந்த பெண்கள்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 24, 2020 10:07 AM

நெல்லையில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nellai Man Brutally Murdered By Gang Body Rescued From Field

நெல்லை தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமூர்த்தி (24). இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று மாசானமூர்த்தி வெளியே செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பாததால் இதுபற்றி அவருடைய குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் மாசானமூர்த்தியை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த கிணறு ஒன்றில் பெட்ரோல் மிதப்பதைப் பார்த்துள்ளனர். அதைவைத்து மாசானமூர்த்தியின் இருசக்கரவாகனம் கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். அப்போது கிணற்றுக்கு அருகில்  ஒரு இடத்தில் புதிதாக குழி ஒன்று தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்துள்ளது.

இதையடுத்து நேற்று அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது மாசானமூர்த்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது உடைகளை வைத்து அந்த உடல் மாசானமூர்த்தியுடையதுதான் என அவருடைய உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அவருடைய  உடலைப் பார்த்து அங்கிருந்த உறவினர்கள் கதறியழ, அவர்களில் 2 பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். அதனால் உடனடியாக அவர்கள் முதலுதவி சிகிச்சைக்காக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த மாசானமூர்த்தியின் உடல் பிரேதப்பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் மாசானமூர்த்திக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து, கழுத்தை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் அவருடைய உடலை சாக்குப்பையில் கட்டி புதைத்துள்ளனர். இதுதொடர்பாக சந்தேகப்படும் படியான நபர்கள் 8 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #HUSBAND #WIFE #NELLAI #PONGAL