'ஜாலியா பேசிகிட்டு இருந்த காதலர்கள்'... 'திடீரென கதறிய காதலி, பறந்த குடை'... 'பீச்'சில் நடந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடற்கரையில் அமர்ந்து காதலியுடன் பேசிக்கொண்டிருந்த காதலன், திடீரென காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் அவ்வப்போது சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில் நேற்று இருவரும் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கடற்கரையில் சந்தித்துள்ளார்கள். இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது, மருத்துவ மாணவியின் காதலன் திடீரென அவரின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி அலறி துடித்துள்ளார். அப்போது கொடூர வலியினை தாங்க முடியாமல் தனது கையில் இருந்த குடையை தூக்கி எறிந்துள்ளார். அந்த நேரத்தில் மாணவியின் காதலரான ராணுவ வீரர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். இந்நிலையில் அங்கு பணியில் இருந்த விமான புலனாய்வு அதிகாரி ஒருவர், ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை உணர்ந்து, தப்பியோடிய ராணுவ வீரரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையே மாணவியின் சடலம் கடற்கரையில் மூழ்கியிருந்த நிலையில், அது காவல்துறையினரால் மீட்கப்பட்டது. ராணுவ வீரர் காதலியை எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
