‘பிளாட்பார்மில் நின்ற இளைஞர் செய்த விபரீத செயல்’.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. சென்னை சென்ட்ரலில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 24, 2020 04:36 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai central railway station youth standing on high power tower

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் இளைஞர் ஒருவர் நின்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென தண்டவாளத்தின் அருகே உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், இளைஞரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் காதில் வாங்கிக்கொள்ளாமல் உயர் அழுத்த மின்கம்பி செல்லும் மின்கம்பத்தில் ஏறி அமர்ந்துள்ளார்.

இதனால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயர் அழுத்த மின்கம்பிக்கு செல்லும் மின் இணைப்பை உடனே துண்டித்துள்ளனர். பின்னர் தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மின்கம்பத்தில் ஏறி இளைஞரை பத்திரமாக மீட்டனர்.

இதனை அடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த மைனாதுனி (30) என்பது தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனால் தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 1 மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

Tags : #TRAIN #CHENNAI #CENTRAL #RAILWAYSATION #YOUTH