“சத்தம் கேட்டு போன சுங்கச்சாவடி பாதுகாவலர்”.. “சென்னையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை அமைக்கப்பட்டுள்ள வெளிவட்டச் சாலையில் ஆங்காங்கே சுங்கச் சாவடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் ஆவடிக்கு அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவதால், அங்கு போக்குவரத்து வழிப்பாதை மாற்றியமைக்கப்படுகிறது. இவ்வழியே வாகனங்கள் செல்லாததால் கண்டெய்னர் லாரிகளை இங்கு நிறுத்திவிட்டு டிரைவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட, அப்போது சத்தம் கேட்டு அங்குவந்த பாதுகாப்பு பணியில் இருந்த வெங்கடேசன்(50), அவர்களை பிடிக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் அந்த கொள்ளையர்கள் வெங்கடேசனை இரும்பு ராடால் தாக்கியதோடு, லாரி டிரைவர்களையும் தாக்கிவிட்டு பணம், செல்போன் முதலானவற்றை பறித்துகொண்டு ஓடிவிட்டனர். இதில் லாரி டிரைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட வெங்கடேசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
