'சபரி மலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தம்பியால்'... 'அக்காவுக்கு நேர்ந்த பயங்கரம்'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 25, 2020 09:06 PM

சென்னையில் மது பாட்டிலை மறைத்து வைத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அக்காவை, சொந்த தம்பியே குத்திக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Drunken brother killed his sister with Knife in Chennai

இலங்கையைச் சேர்ந்தவர், தாரகேஸ்வரி (55). இவரது கணவர் இறந்த நிலையில், தனது தாய் வேதநாயகி மற்றும் 3 குழந்தைகளுடன் சென்னை வளசரவாக்கம், வேலன் நகரில் சில ஆண்டுகளுக்கு முன் குடியேறி வசித்து வருகிறார். இவரது தம்பி குகதாசன் (49) குடும்பத்துடன் இலங்கையில் வசித்து வந்தநிலையில், மாலை அணிவித்து வருடந்தோறும் சபரி மலைக்கு சென்றுவிட்டு, பின்னர் அக்கா தாரகேஸ்வரி வீட்டில் ஒரு மாதம் தங்குவது வழக்கம்.

அதேபோல் இந்த வருடமும் கடந்த 15-ம் தேதி சபரிமலைக்கு சென்றுவிட்டு தனது அக்கா வீட்டில் வந்து குகதாசன் தங்கியுள்ளார். குடிபோதைக்கு அடிமையான அவர், சபரிமலை தரிசனம் முடித்துவிட்டு வந்த நிலையிலும் தொடர்ச்சியாக குடித்து வந்துள்ளார். இந்நிலையில், குகதாசன் வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுபாட்டிலை, தாரகேஸ்வரி மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. மதுபாட்டிலை தேடிய குகதாசன் தனது அக்காவிடம் கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குகதாசன், ஆத்திரத்தின் உச்சியில் தனது அக்கா என்றும் பாராமல் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். இதைத் தடுக்க முயன்ற தாரகேஸ்வரியின் மகன் ஆதிசன், தாய் வேதநாயகி ஆகியோரையும் குகதாசன் கத்தியால் குத்தியுள்ளார். 

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன், போலீசாருக்கு தகவல் தொவித்தனர். இதன்பேரில் உடனடியாக விரைந்து வந்த போலீசார், போதையில் இருந்த குகதாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தாய் இன்றி குழந்தைகள் அனாதையாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #CHENNAI #BROTHER #SISTER