VIDEO: ‘ஸ்கூல் பஸ் மீது அசுர வேகத்தில் மோதிய கார்’.. பதபதைக்க வைத்த சிசிடிவி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி பேருந்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த சுஜித்லால் என்பவர் மதுரைக்கு காரில் வந்துகொண்டு இருந்துள்ளார். காக்காதோப்பு நான்கு வழிச்சாலையில் கார் வேகமாக வந்துகொண்டிருந்தபோது, பள்ளி பேருந்து ஒன்று சாலையை கடந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது கார் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சுஜித்லால் மற்றும் கார் ஓட்டுநர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்கள் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
