'மனைவியும், நண்பனும் சேர்ந்து...' 'கொடூரமா அடிச்சே கொன்ருக்காங்க...' 'நல்ல டீப் ஸ்லீப்ல இருக்கிறப்போ...' கள்ளகாதலினால் நடந்த பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்காதலை கண்டு பிடித்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை போல் சித்தரித்தது விசாரணையில் வெளிவந்துள்ளது.

நாமக்கல் அருகே கொடிக்கால்புதூர் ஊராட்சியை சேர்ந்த ராமன்(38) மற்றும் அவரது மனைவி சத்யா(32) ஆகியோருக்கு தீபிகா (12), ஸ்ரீ ஹரி (8) ஆகிய இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். கட்டட வேலை செய்து வரும் ராமனுக்கு அதற்கு உதவியாளராக இருக்கும் ராமமூர்த்திக்கும் இடையே நட்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் ராமனின் மனைவி சத்யாவிற்கும் ராமமூர்த்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ராமன் தன் மனைவியை கண்டித்ததுடன் ராமமூர்த்தியையும் அடக்கி வைத்துள்ளார். இருப்பினும் ராமருக்கு தெரியாமல் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர்.
தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த ராமரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சத்யாவும் ராமமூர்த்தியும் , கடந்த 20-ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராமனை இருவரும் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது.
இதை கொலை என கண்டுபிடிக்காத வண்ணம், அவரது உடலை தற்கொலை செய்து கொண்டது போல் தொங்க விட்டுள்ளனர். மேலும் இத்தகவல் காவல்துறைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்ட இருவரும் ராமனின் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தகனம் செய்து விட்டனர்.
ஆனால் சகோதரனின் மரணத்தில் சந்தேகமடைந்த ராமனின் தம்பிகள் பாஸ்கர் மற்றும் இலட்சுமணன் இருவரும் 27- ஆம் தேதி நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் காந்தியிடம் புகார் மனு அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று சத்யா மற்றும் அவரது தந்தை கோவிந்தன், உறவினர்கள் பூங்காவனம், சுதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சத்யா தன் கணவனை கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார். இதற்கடுத்து வெள்ளிக்கிழமை காலை ராமன் மனைவி சத்யா மற்றும் கள்ளக்காதலன் ராமமூர்த்தி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கள்ளகாதலுக்காக கணவனை கொலை செய்து தற்கொலை போல சித்தரித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது'

மற்ற செய்திகள்
