‘மனைவி சொன்ன ஒரு வார்த்தை’.. ஆத்திரத்தில் ‘மூக்கை’ கடித்து துப்பிய கணவன்.. மிரள வைத்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 04, 2020 05:55 PM

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man bit off wife\'s nose after she threatened to leave home

உத்தரப்பிரதேச மாநிலம் முதியா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி தேவி (34). இவரது கணவர் மூல்சந்த். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 6 மாதகாலமாக சரோஜினி தேவி தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிராம பஞ்சாயத்தினர் இருவரையும் சமாதனப்படுத்தி சேர்ந்து வாழ அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரோஜினி தேவி ‘நான் மறுபடியும் பெற்றொர் வீட்டுக்கு போய்விடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் கோபமான மூல்சந்த் தனது மனைவின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். இதில் காயமடைந்த சரோஜினி தேவி அலறித்துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சரோஜினி தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கணவர் மூல்சந்த் மீது சட்டப்பிரிவு 326-ன் கீழ் (தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தல்) வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் நடந்த கணவன்-மனைவி சண்டையில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் 181, 1091, 122 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.