'சாப்பாடு தராம சித்ரவதை பண்ணுவாங்க...' 'நைட்ல வீட்டுக்குள்ள சேர்க்காம வெளிய தொரத்திடுவாங்க...' பெண் குழந்தை பெற்றதால் கணவர் குடும்பம் செய்த கொடுமை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 23, 2020 03:44 PM

பெண் குழந்தை பிறந்ததால் வீட்டை விட்டு வெளியே துரத்திய கணவரை கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்ணால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Husband\'s family is horrible for having a baby girl

கடந்த 2018 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மபிரியாவிற்கும் அதே பகுதியில் இருக்கும் ராஜேந்திர பாபு என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் நடத்தப்பட்டது.

திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில்  சில மாதங்கள் கழித்து அவர்களுக்கும் விரிசல் விழத்தொடங்கியுள்ளது. மேலும் பத்மப்ரியாவின் கணவர், அவருடைய அக்கா மற்றும் தங்கையும் அவர்களது கணவர் ஆகியோர் சேர்ந்து, பத்மபிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனிடையில் கர்ப்பமாக இருந்த பத்மபிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த பின் அவர்களுடைய கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பெண் குழந்தை என்பதால் அதை வைத்தும் பத்மபிரியாவை கொடுமை செய்துள்ளனர்.மேலும் குழந்தை மற்றும் மனைவியை ஒதுக்கி வைப்பதுடன் இரவு நேரங்களில் வீட்டுக்குள் சேர்க்காமல் வெளியில் நிறுத்துவது, சாப்பிட உணவு வழங்காமல் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளனர். இதை எல்லாம் பொறுக்க முடியாத  இன்று (மார்ச் 23) பத்மபிரியா தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரிடம் நடந்த கொடுமைகளை கூறியுள்ளார். மேலும் பத்மபிரியா, தன்னை கொடுமை செய்தவர்களை தண்டிக்க வேண்டும், தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து போலீஸார் பத்மபிரியாவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #HUSBANDANDWIFE