"டிக்டாக்ல யார் யாருடனோ ரொமான்ஸ் பாடல்... வெறுப்பாயிட்டேன்!".. சந்தேக கணவரால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 20, 2020 07:51 PM

மதுரை திருநகர் சூறாவளி மேட்டைச் சேர்ந்தவர் அசோக். இவர் சுதா என்கிற அழகுக் கலை நிபுணரை 8 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு 6 வயதில் பெண் குழந்தையும் 4 வயதில் பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், டிக்டாக் மீது அதிக ஆர்வம் கொண்ட சுதா, அவ்வப்போது டிக்டாக்கில் பொழுதை கழித்துள்ளதாக தெரிகிறது.

because of doing tiktok videos doubted husband kills wife

காதல் பாடல்களுக்கு வாயசைத்து சுதா, பாடி நடித்த அந்த டிக்டாக் வீடியோக்களை பயன்படுத்தி சில டிக்டாக் பயனாளர்கள் டூயட் பாடுவது போல் செய்து டிக்டாக் வீடியோக்களை வெளியிட, அதைப்பார்த்த அசோக்கின் நண்பர்கள் சிலர் அசோக்கிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர். இதையடுத்து அசோக் தன் மனைவி சுதாவைக் கண்டித்துள்ளார். மேலும் டிக்டாக் வீடியோக்களை செய்வதை நிறுத்தவும் கூறியுள்ளார். ஆனால் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த அசோக்கின் வார்த்தையை சுதா அலட்சியமாக எடுத்துக்கொண்டதாகவும், இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஒருநாள் கணவரிடம் சொல்லாமல் சுதா, வேலை நிமித்தமாக கோவைக்கு சென்றுள்ளார்.  இதனிடையே குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு அசோக் அழைத்துச் சென்று, அங்கு விட்டுவிட்டு வந்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய சுதா, குழந்தைகளை அழைத்துவரும்படி கூற, அசோக்கிற்கும் சுதாவுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அப்போது ஆத்திரத்தில் அசோக், மனைவியை தாக்கி கீழே தள்ளி சேலையை மனைவின் கழுத்தில் சேலையை கட்டி இறுக்கிக் கொன்றுள்ளார். அதன் பின்னர் தப்பித்துச் சென்றுவிட்ட அசோக்கை திருநகர் போலிஸார், திருப்பரங்குன்றம் அருகே பிடித்து கைது செய்தனர். 

போலீஸ் விசாரணையில் பேசிய அசோக், வேலை கிடைக்காமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்த அசோக், மனைவியின் டிக்டாக் வீடியோக்கள், அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் உள்ளிட்டவற்றால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததாகவும், மனைவியுடன் யார் யாரோ டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டதை பார்த்த நண்பர்கள் கேலி செய்ததால் மனைவியை வெறுத்ததாகவும், கண்டித்ததாகவும், ஆனால் மனைவி தன் பேச்சை கேட்காததால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளதோடு சம்பவத்தன்று தனது மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை சேலையால் கட்டியிறுக்கிக் கொன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #HUSBANDANDWIFE