‘யாருமே என்ன கண்டுக்கல’.. நள்ளிரவு வீட்டுக்குள் நடந்த பயங்கரம்.. முதியவர் சொன்னதை கேட்டு ‘ஷாக்’ ஆன போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 12, 2020 04:23 PM

குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் தலையை வெட்டிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Salem old man killed his wife for refusing him money to buy alcohol

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி லட்சுமி. இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருவதால், வயதான தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்..

இந்த நிலையில் நாராயணன் நேற்றிரவு மனைவி லட்சுமியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் லட்சுமி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் அருகில் இருந்த அரிவாளால் மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் வாழப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்து, மனைவியை கொலை செய்தது குறித்து தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், வயதான காலத்தில் தன்னை யாரும் கண்டு கொள்வதில்லை எனவும், சரிவர வேலை கிடைக்காத சூழலில் குடிக்க பணம் கேட்டு தராததால் மனைவியை கொலை செய்ததாக போலீசாரிடம் நாராயணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags : #CRIME #SALEM #MURDER #HUSBANDANDWIFE