‘குடும்பம் நடத்த வரமறுத்த காதல் மனைவி!’.. ‘கணவர் செய்த விபரீத காரியம்’.. கரூரில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 13, 2020 01:29 PM

கரூரில் சேங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் மாயமணி மலர் என்கிற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது.

Karur husband attempting suicide after wife left him

இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக சில பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சில தினங்களுக்கு முன்புதான் மாயமணி மலர் ராஜ்குமாரிடம் கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. மனைவி மாயமணி மலர் ராஜ்குமார் பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து போன ராஜ்குமார், அப்பகுதியில் இருக்கும் மின்மாற்றி ஒன்றின் மீது ஏறி அங்கிருந்த மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். இவரை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்ததை அடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அவரை சேர்த்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #HUSBANDANDWIFE