‘தீ வைக்கமாட்டார்னு நெனச்சேன்’.. ‘ஆனா..!’.. இறக்கும் தருவாயில் மனைவி கொடுத்த வாக்குமூலம்.. நொறுங்கிபோன குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 05, 2020 03:20 PM

குடும்ப பிரச்சனையில் கணவரை மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய மனைவி மீது கணவர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sivagangai man sets wife on fire due to family problems

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குறிச்சிகண்மாய் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (40). இவர் அப்பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுகந்தி (35) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். செந்திலுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செந்தில் மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சுகந்தி கணவரை மிரட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றுக்கொண்டு நின்றுள்ளார். அப்போது செந்தில் தீக்குச்சியை பற்ற வைத்து சுகந்தியின் மீது போட்டுள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் சுகந்தி வலியில் துடித்து அருகில் இருந்த கணவர் மீது விழுந்துள்ளார். இதனால் இருவர் மீது தீப்பற்றி அலறி துடித்துள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக சுகந்தி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சுகந்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘நல்லவர்தான், கெட்டவரெல்லாம் கிடையாது. அவர்தான் பற்றவைத்தார். நான் பற்ற வைக்கமாட்டர் என போய் நின்றேன். ஆனா வச்சிவிட்டார். என்ன நடந்தாலும் அவரை தொந்தரவு பண்ணக்கூடாது’ என இறக்கும் தருவாயிலும் தனது கணவர் நல்லவர் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மனைவி உருக்கமாக தெரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது செந்தில் 40 சதவீத தீக்காயங்களுடன் சிவகங்ககை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுகந்தியின் உறவினர்கள் கொடுத்த புகாரை அடுத்து செந்தில் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுப்பழக்காதால் கணவன்-மனைவி இடையே நடந்த சண்டையில் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: News18Tamil