கணவனால் 'கைவிடப்பட்ட' இளம்பெண்களை மிரட்டி... ஆபாச படமெடுத்தவருக்கு... மருத்துவ பரிசோதனையில் 'காத்திருந்த' அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமையில் வாடும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படமெடுத்த அழகுநிலைய உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட மூவரையும் போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

இதற்கு உடந்தையாக இருந்த அழகுநிலைய உரிமையாளரின் மனைவி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் இளம்பெண்களை மிரட்டி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முடிவு செய்திருந்த விவரம் வெளியானது. இளம்பெண்கள் 6 பேர் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் அழகுநிலைய உரிமையாளர் லோகநாதனுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அவரை விசாரித்த 14 காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சேலம் மகளிர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
