'15,000 பேர வேலையை விட்டு தூக்க முடிவு பண்ணிட்டோம்...' 'பிரபல கார் கம்பெனி அறிவிப்பு...' இன்னொரு நாட்டுல இருக்குற 4 கம்பெனிகளையும் மூட போறாங்களாம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்நாள் ஒரு வீதம் பல பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பணிநீக்க எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. இன்று சுமார் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணத்தால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பெரிய நிறுவனங்களும் தங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் சுமார் 15,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
பொருளாதார தேக்கத்தை சந்தித்து வரும் மக்கள் எதிர்காலங்களில் கார் வாங்கும் நிலையும் நிச்சயமாக குறையும். இதனால் கார் நிறுவனங்களும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்பது உண்மையே. அதன்காரணமாக செலவு வீதத்தை சரி செய்ய இவ்வாறான முடிவுகளை எடுக்கப்போவதாக இடைக்கால தலைமை செயல் அதிகாரி குளோடில்ட் டெல்போஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 2.2 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16 கோடி) செலவை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் பிரான்சில் உள்ள நான்கு உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படலாம் அல்லது மறுசீரமைக்கப்படலாம் எனவும் கூறியுள்ளது.
மேலும் மொரோக்கா மற்றும் ருமேனியாவில், தொழில் நிறுவன விரிவாக்க திட்டங்கள் நிறுத்தப்படுவதன் மூலம் பிரான்சுக்கு வெளியே கூடுதலாக 10,000 பேர் வேலை இழக்கவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தின் வருவாய் இழப்பை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச அளவில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
15000 ஊழியர்களின் வேலை பறிபோகும் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்பில் தங்களை தற்காத்து கொள்ள வேண்டிய சுழலும், பணி பறிபோகுமா என்று அஞ்சும் சுழலும் மக்கள் மனதில் ஒரு வித கலக்கத்தை சேர்ந்து ஏற்படுத்தியுள்ளது எனலாம்.