'கமகமக்கும் வெட்டுக்கிளி பிரியாணி...' 'புரோட்டின் இருக்கனால செம டேஸ்ட்...' 'சைட்டிஷ்க்கு லோகஸ்ட்-65...' பட்டைய கிளப்பும் ராஜஸ்தான் உணவகங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் வடமாநிலங்களுக்கு படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகளை பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை செய்து வருகின்றது ராஜஸ்தான் உணவகங்கள்.

கடந்த சில நாட்களாக பல கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையென திரண்டு வந்து விவசாய பயிர்களை அழித்து வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வீடியோவாக வெளிவருகிறது. இந்த வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ளது. விவசாய பயிர்களுக்கு பெரும் சவாலாகவும் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்திவிடும் என வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, கிரேவி, லோகஸ்ட் 65 உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் வெட்டுக்கிளியைச் சமைப்பதற்கு முன் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக அதன், கால், இறக்கைகளை நீக்கிவிட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.அதிக புரதசத்து மிக்க வெட்டுக்கிளி உணவுகளை விரும்பும் ராஜஸ்தான் பகுதி மக்கள் அதன் சுவை மிகவும் ருசியாக இருப்பதாக கூறுகின்றனர்.

மற்ற செய்திகள்
