"பிஸியாக இருந்த மனைவியின் போன்!"... 'குவாரண்டைன்' வார்டிலிருந்து தப்பிச் சென்று 'மனைவிக்கு' கணவர் 'கொடுத்த' கொடூர 'தண்டனை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 15, 2020 07:19 PM

கொரோனாவால் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த புலம் பெயர் தொழிலாளி ஒருவர், தனது மனைவிக்கு போன் செய்தபோது, போன் பிஸியாக இருந்ததால் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

quarantined man suspect wife of having affair, this is what he did

சத்தீஸ்கரின் ஜாஸ்பூர் மாவட்டத்தில் 25 வயதான லலித் கோர்வா, ஒரு புலம் பெயர் தொழிலாளி என்பதால், கடந்த புதன் கிழமை முதல் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டோர் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அந்த முகாமில் இருந்து தனது மனைவி பியார் பாயிடம் பேச முயற்சித்த போது மனைவியின் போன் பிஸியாக இருந்துள்ளதால் லலித் ஆத்திரம் கொண்டுள்ளார்.

மேலும் மனைவி யாரிடமோ போன் பேசிக்கொண்டிருக்கிறார் என்றால், அவர் யாருடனோ முறையற்ற உறவை வைத்துக்கொண்டுள்ளார் என்று சந்தேகம் அடைந்த லலித், தான் தங்கியிருந்த தனிமைப்படுத்தப்பட்டோர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்று, தான் இல்லாத நேரத்தில் யாருடனோ போன் பேசுவதற்கு உதவி செய்த தன் மனைவியின் கைகளை, வீட்டில் இருந்த தன் 2 வயது குழந்தையின் கண் முன்னே கோடரியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்ற அவரை போலீஸார் கைது செய்தனர். காயம் பட்ட பியார் பாய் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.