"இந்த லாக்டவுன் முடியுறதுக்குள்ள அவர் கதைய முடிச்சுர வேண்டிதான்!" .. 'கள்ளக்காதலருடன்' சேர்ந்து 'மனைவி' போட்ட 'மாஸ்டர் ப்ளான்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 07, 2020 05:50 PM

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில், காதல் திருமணம் செய்து 11 ஆண்டுகளான ரேணுகாதேவி-பால  சுப்ரமணியம்  தம்பதியர் தங்களது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

Wife Kills husband with the help of boyfriend during lockdown

ஆனால் சித்தூரில் தனது புத்தக விற்பனை தொழில் சரிவர இயங்காததால், திருப்பதியில் ட்ராவல்ஸ் நிறுவனம் தொடங்கிய பாலசுப்ரமணியம் அங்கு தனியாக வசித்து வந்தார். இதனிடையே உள்ளூரில் சமூக தொண்டு நிறுவனத்தில் ரேணுகாதேவி தன்னை இணைத்துக்கொண்டார்.  அந்த அமைப்பின் தலைவரான நாகிரெட்டி என்பவருடன் அவருக்கு உண்டான நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இப்படியே 2 ஆண்டுகள் போக, சொந்த ஊருக்குத் திரும்பிய ரேணுகாதேவியின் கணவர் பாலசுப்ரமணியம் உள்ளூரிலேயே தனது ட்ராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் ஊர் திரும்பிய கணவர் தன் காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய ரேணுகாதேவியும் அவரது காதலரும் கடந்த 2 மாதங்களாகவே பாலசுப்ரமணியத்தை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி வந்தனர். அதற்குள் தொடர் ஊரடங்கு உத்தரவும் வந்தது. இதுதான் சரியான நேரம் என எண்ணிய ரேணுகாதேவி, தனக்கு உடல்நிலை சரியில்லை எனச் சொல்லி தனது கணவரை மருந்து வாங்கிவரச் சொல்லி தனியாக வெளியே அனுப்ப, அப்போது ரேணுகாதேவியும், நாகிரெட்டியும் சேர்ந்து முன்னமே செட் பண்ணியிருந்த லாரி டிரைவர், வேகமாக வந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த பாலசுப்ரமணியத்தின் மோதியடித்துக் கொன்றார்.

இதனை அடுத்து லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர். ரேணுகாதேவியின் செல்போன் உரையாடல்களையும் கொண்டு துழாவிய போலீஸார் ரேணுகாதேவி மற்றும் நாகிரெட்டி போட்ட ஸ்கெட்சினை கண்டுபிடித்ததோடு, தனது கணவரின் மரணத்தின்போது எவ்வித கவலையுமின்றி சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ரேணுகாதேவியின் நடவடிக்கையை போலீஸார் கவனித்ததாகவும் தெரிகிறது. இதனிடையே கள்ளக்காதலுக்காக ரேணுகாதேவியும் நாகிரெட்டியும்தான் தன்னிடம் பணம்  கொடுத்து பாலசுப்ரமணியத்தைக் கொல்லச் சொன்னதாக லாரி டிரைவர் அளித்த வாக்குமூலம் இதை உறுதிப்படுத்தியது. அதன் பின்னர் ரேணுகாதேவி, நாகிரெட்டி இருவரையும் சிறைக்கு அனுப்பிய போலீஸார், கொலைக்கு காரணமான லாரியையும் பறிமுதல் செய்தனர்.