‘உன் மனைவி எங்கே?’.. ‘கூலாக சிரிச்சிகிட்டே கணவன் சொன்ன பதில்’.. சென்னையில் நள்ளிரவு நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 30, 2020 04:26 PM

சென்னையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கியிருந்த கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai man killed his wife over family problem during curfew

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளத்தை சேர்ந்தவர் ரவி (40). இவரது மனைவி சாவித்திரி (38). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரவி ஸ்டீல் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். சாவித்திரி அப்பகுதியில் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இரண்டு பிள்ளைகளும் சாவித்திரியின் சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டனர். அதனால் ரவியும், சாவித்திரியும் மட்டும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (29.03.2020) ரவி வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவியின் அம்மா, ‘சாவித்திரி இன்னும் எழுந்திருக்கவில்லையா? அவள் எங்கே?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு ரவி சிரித்தபடி, ‘அவள் கட்டிலில் படுத்துக்கிடக்கிறாள்’ என கூறியுள்ளார். உடனே ரவியின் அம்மா வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது சாவித்திரி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சாவித்திரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ‘அவளை நான்தான் கொலை செய்தேன்’ என  ரவி கூலாக சொன்னாதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தெரிவித்த போலீசார், ‘ஊடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி கிடந்த ரவிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த 28ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அன்று இரவு இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவு சாவித்திரியின் தலையில் ஓங்கு சுத்தியலால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சாவித்திரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அடுத்தநாள் வீட்டில் ஏதும் நடக்காததுபோல ரவி இருந்துள்ளார். பின்னர் அக்கப்பக்கத்தினர் சாவித்திரி குறித்து ரவியிடம் விசாரித்தபோது கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது. விசாரணையில் ரவிக்கு மனநலம் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: Vikatan

Tags : #CRIME #MURDER #POLICE #CHENNAI #HUSBANDANDWIFE