‘என் பொண்டாட்டியும், பொண்ணும் சேர்ந்துதான் என்ன கொளுத்தினாங்க....’ அதிர வைக்கும் மரண வாக்குமூலம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொந்த மகளும், மனைவியும் தான் தன்னை பெட்ரோல் ஊற்றி கொன்றார்கள் என்று நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியை அளித்துள்ளது.

கந்தசாமி(45) என்பவர் தனது மனைவி அங்கம்மாள் மற்றும் மகள் சாந்தியுடன் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை ஜீவா நகர் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் வழக்கம் நேற்றும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மனைவி மற்றும் மகள் இல்லாததால் அக்கம் பக்கத்தினருடன் விசாரித்ததில் அங்கம்மாள் அவருடைய அப்பா வீட்டிற்கு போனதாக தெரியவந்துள்ளது.
இரவு நேரத்தில் கந்தசாமி தனது வீட்டின் வெளியில் தனியாக கயிற்று கட்டிலில் தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இவர் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளனர். சுதாரித்து கொண்டு எழுவதற்குள் தீயை பற்ற வைத்து விட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் கந்தசாமியை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் முதலில் கந்தசாமிக்கு எதிரானவர்கள் தான் இதை செய்திருக்க கூடும் என்று கருதி தங்களுடைய விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அதிக தீக்காயத்துடன் சிகிச்சை எடுத்து வந்த கந்தசாமி மருத்துவமனையில் தனது மரண வாக்குமூலத்தை அளித்துள்ளார். தன் மீது தனது மனைவியும், மகளும் பெட்ரோல் உற்றி தீவைத்ததாக அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்
மருத்துவர்களின் கடும் முயற்சிக்கு பின் சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். இதனை அடுத்து போலீசார் கந்தசாமியின் மனைவி அங்கம்மாள் மற்றும் மகள் சாந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
