‘வேண்டாம் என்று சொல்லியும் கேட்காததால்’... ‘மனைவியின் விபரீத முடிவால்’... ‘விரக்தியில் கணவர் செய்த காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 14, 2020 07:55 AM

குடும்பத்தகராறில் மனைவி தீக்குளித்து இறந்ததால் விரக்தியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Frustrated car driver trying commits suicide after his wife dies fire

சென்னை மதுரவாயல், ஜானகி நகர், முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநரான 32 வயது தாமஸ். இவருடைய மனைவி ரஞ்சிதா என்ற எஸ்தர் (27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் செல்வதற்கு சவாரி ஒன்று வந்திருப்பதாகவும், ஊரடங்கு காலத்தில் இந்த சவாரிக்கு சென்று வந்தால் வருமானம் கிடைக்கும் என மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவர், தற்போது அங்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மனைவி எஸ்தர், வீட்டில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாமஸ், அவரது உடலில் எரிந்த தீயை அனைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை எஸ்தர் உயிரிழந்தார். குடும்பத் தகராறில் மனைவி இறந்த செய்தி கேட்ட தாமஸ், துக்கம் தாங்க முடியாமல் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அப்போது அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய தாமசை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத் தகராறில் யோசிக்காமல் எடுத்த விபரீத முடிவு தற்போது 3 குழந்தைகளை தாயில்லாமல் ஆக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புகைபிடிக்க மாட்டேன் என்ற சத்தியத்தை கணவர் மீறியதால், அவரை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக கையில் வைத்திருந்த டீசலில் சிறிதளவு எடுத்து நான் அணிந்திருந்த நைட்டியின் மேல் ஊற்றி பற்ற வைத்தேன் என்று எஸ்தர் வாக்குமூலம் அளித்துள்ளார்.