‘கர்ப்பிணி மனைவியின் முடிவால்’... ‘பரிதவித்துப்போன கணவர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 27, 2019 02:29 PM

கணவரிடம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஃபோனில் தெரிவித்துவிட்டு, 4 மாத கர்ப்பிணிப் பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

wife commit suicide due to family issue in kallakurichi

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன். இவரின் மகளான ஐஸ்வர்யா என்பவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளியான, பாரதி என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா கர்ப்பமாகியுள்ளார். 4 மாத கர்ப்பிணியான அவர், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தனது கணவருடன் மருத்துவப் பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து கர்ப்பிணியான ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு, அவரது தந்தை வீட்டில் விட்டுவிட்டு, கணவர் பாரதி சென்றதாக கூறப்படுகிறது. கணவர் சென்ற சிறிது நேரத்தில், அவருக்கு ஃபோன் செய்த மனைவி, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கணவர், சிறிது நேரம் கழித்து மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மனைவி ஐஸ்வர்யா தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், கள்ளக்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கணவரின் வீட்டில் இருந்த சில பிரச்சனைகள் காரணமாக, தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags : #PREGNANT #WOMEN #KALLAKURICHI