‘பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்’.. ‘தனியார் மருத்துவமனையில்’ நடந்த அதிரவைக்கும் சம்பவம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 02, 2019 09:13 AM

ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த பெண்ணிடம் வார்டு பாய் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad Ward boy held for molesting woman patient on ventilator

ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் பஞ்சரா ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை பிறந்ததும் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து அவர் ஒரு வாரமாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அங்கு வந்த வார்டு பாய் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு நேற்று உடல் நிலை சரியானதும் அவர் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் பஞ்சரா ஹில்ஸ் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அச்யுத் ராவ் (50) என்ற வார்டு பாயைக் கைது செய்துள்ளனர்.

Tags : #HYDERABAD #PRIVATE #HOSPITAL #PREGNANT #WOMAN #WARDBOY #MOLEST #PATIENT #VENTILATOR