‘சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள் கூறியதைக் கேட்டு’.. ‘உறைந்து நின்ற தாய்’.. ‘கணவர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 11, 2019 05:29 PM

கன்னியாகுமரியில் 13 வயது சிறுமியை அவரது தாயின் இரண்டாவது கணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 yo girl impregnated by step father in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவரை இழந்த அவர் இரண்டாவதாக சசிகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். கேரளாவில் வேலை செய்துவந்த சசிகுமார் அவ்வப்போது வந்து அவர்களுடன் தங்கிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த மகளை அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்தப் பெண் உடனடியாக இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சசிகுமார் இவர்களுடைய வீட்டிற்கு வரும்போதெல்லாம் தனியாக இருக்கும்போது மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. அதை வெளியில் சொன்னால் நீயும், உன் தாயும் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டுமென மிரட்டியதால் சிறுமி இதுபற்றி தாயிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து சசிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Tags : #KANYAKUMARI #MOTHER #DAUGHTER #STEPFATHER #RAPE #PREGNANT #SHOCKING