‘16 குழந்தைகள், 20 வது முறையாக கர்ப்பம்’.. ஆச்சரியத்தில் உறைய வைத்த இந்திய பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Sep 11, 2019 10:53 AM
மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் 20 வது முறையாக கர்ப்பம் தரித்த சம்பவம் அம்மாநில அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த லங்காபாய் காரத் என்ற 38 வயதான பெண் 20 வது முறையாக கருத்தரித்துள்ள செய்தியை அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருக்கு 16 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதில் 11 குழந்தைகள்தான் உயிருடன் இருப்பாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் லங்காபாய் காரத்துக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
20 வது முறையாக கர்ப்பமான லங்காபாய் காரத், இதுவரை மருத்துவமனையில் குழந்தை பெற்றுகொண்டதே இல்லையாம். அனைத்து பிரசவங்களும் வீட்டில்தான் நடைபெற்றுள்ளன. இவர்களது வாழ்வாதாரம் தினக்கூலியாக சிறிய வேலைகளை செய்வதால் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்து கொண்டே இருந்துள்ளனர். அதனால் சுகாதாரத் துறை அதிகாரிகளால் லங்காபாயை கண்டறிய முடியவில்லை. தற்போது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரால் கண்டறியப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
