‘கர்ப்பிணியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்’.. காதலன் எடுத்த வீபரீத முடிவு..! நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Aug 13, 2019 11:45 AM
ராஜஸ்தானில் காதலனைத் தாக்கிவிட்டு கர்ப்பிணி பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதில் இருவரும் நெருக்கமாக இருந்ததை அடுத்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 13 -ம் தேதி இருவரும் இரவு தங்களது கிராமத்துக்கு பைக்கில் சென்றுகொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்களை வழி மறித்த கும்பல், காதலனை தாக்கிவிட்டு அப்பெண்ணை தூக்கி சென்றுள்ளனர். இதனை அடுத்து அந்த கும்பல் தங்களது நண்பர்கள் சிலரையும் அழைத்து அப்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அங்கேயே பெண்ணை விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் அப்பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளது. தனது காதலியை காப்பாற்ற முடியாக சோகத்தில் அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து அப்பெண் அப்போது யாரிடம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜீதேந்தார் என்பவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த விஷயங்கள் அனைத்தும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணும் இதுகுறித்து போலீசில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.